நடுவானில் விமானத்துடன் மாயமான ஜேர்மன் மில்லியனர்: வெளிவரும் புதிய தகவல்


லிமோன் விமான நிலையத்திலிருந்து 17 மைல் தொலைவில் குறித்த விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள்

விமானம் காணாமல் போனது குறித்து கோஸ்டாரிகா அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு எச்சரிக்கை

ஜேர்மன் மில்லியனர் மற்றும் குடும்பத்தினர் பயணம் செய்த தனியார் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மன் மில்லியனரான Rainer Schaller மற்றும் அவரது குடும்பத்தினர் பயணப்பட்ட தனியார் விமானமானது கோஸ்டாரிகாவில் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில், தீவிர தேடுதல் நடவடிக்கையின் ஒருபகுதியாக விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நடுவானில் விமானத்துடன் மாயமான ஜேர்மன் மில்லியனர்: வெளிவரும் புதிய தகவல் | German Millionaire Vanishes Horror Plane Crash

@getty

லிமோன் விமான நிலையத்திலிருந்து 17 மைல் தொலைவில் குறித்த விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி சுவிட்சர்லாந்து குடிமகன் எனவும் அவருக்கு 66 வயது எனவும் கோஸ்டாரிகா அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக, மெக்சிகோவில் இருந்து லிமோன் நகருக்கு புறப்பட்ட விமானம் காணாமல் போனது குறித்து கோஸ்டாரிகா அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு எச்சரிக்கை கிடைத்துள்ளது.

நடுவானில் விமானத்துடன் மாயமான ஜேர்மன் மில்லியனர்: வெளிவரும் புதிய தகவல் | German Millionaire Vanishes Horror Plane Crash

@getty

இதனிடையே, லிமோன் விமான நிலையத்திலிருந்து சில நிமிடங்கள் தொலைவில் குறித்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை சடலங்கள் எதுவும் மீட்கப்பட்டதாக தகவல் இல்லை. தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.