
நவ., 4ல் வெளியாகும் ‛நித்தம் ஒரு வானம்'
ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் ‛நித்தம் ஒரு வானம்'. ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். வித்தியாசமான காதல் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற நவ.,4ல் இந்த படம் வெளியாக உள்ளது. அன்றைய தினம் தான் சுந்தர் சி இயக்கி உள்ள காபி வித் காதல் படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.