வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்ததாக எப்.ஏ.டி.எப். அமைப்பின் குற்றச்சாட்டில் ”கிரே” பட்டியலிலிருந்த பாகிஸ்தான் அதிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்க செய்வதை தடுக்க ஆசிய பசுபிக் குழுக்களுடன் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும். ஏப்.ஏ.டி.எப்., அமைப்பின் ஆய்வு காரணமாக, மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட பல முக்கியமான பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது.

சர்வதேச நலன் கருதி, பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நம்பக்கூடிய, ஆக்கப்பூர்வமான , கொள்கையை மாற்ற முடியாத வகையில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில் உலகம் தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement