சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5.93 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மும்பை பயணிகள் 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடிய மற்றொரு பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.
