மூத்த பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த பத்திரிகையாளரும், ‘Industrial Economist’ இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளருமான எஸ்.விஸ்வநாதன் (84) நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவையடுத்து இன்று மறைவெய்தினார் என்று அறிந்து வேதனையடைந்தேன்.

சென்னையில் இருந்து வெளிவரும் தொழில்துறை சார்ந்த ‘Industrial Economist’ இதழை அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாகத் திறம்பட நடத்தி வந்த விஸ்வநாதன் இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாது, பல்வேறு உலக நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தொழிற்திட்டங்களை ஆழமாக அறிந்துகொண்டு பல கட்டுரைகளை வழங்கியவர் ஆவார்.

வயதை மீறிய சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் இயங்கி வந்த அவரது மறைவு ஊடகத்துறைக்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் சக பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.