வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சான்டியாகோ : தென் அமெரிக்க நாடான சிலியில் கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் ரோட்டில் வீசி சென்ற ‘சிசிடிவி’ காட்சி வெளியாகிஉள்ளது.
சிலியின் சான்டியாகோ மாகாணத்தில் உள்ள புடாஹால் நகரில் விளையாட்டு கிளப்பில் நுழைந்த கொள்ளை கும்பல், ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பியது. போலீசார் அவர்களை விரட்டினர்.
நெடுஞ்சாலையை அடைந்ததும் கொள்ளையர்கள் சினிமாவை போல கொள்ளையடித்த பணத்தை ரோட்டில் வீசினர். வழியில் சென்ற பலர் வாகனத்தை நிறுத்தி ரோட்டில் பறந்த இப்பணத்தை எடுத்தனர்.

ஆனால் பின்தொடர்ந்த சென்ற போலீசார், போக்குவரத்தை ஒழங்கு செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் ரூ.8.50 லட்சம் இருந்தது.
இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிலியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement