100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கிய ரிஷி சுனக்


இங்கிலாந்தில், இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ரிஷி சுனக், கொன்சர்வேடிவ்
கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதம மந்திரி பதவிக்கான போட்டியில்
நுழைவதற்கு தேவையான 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கியுள்ளார்.

இதுவரை அவருக்கு 93 ஒப்புதல்கள் கிடைத்துள்ளன, இருப்பினும் அவர் ஏற்கனவே 100
பேரின் ஒப்புதல்களை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், 44 ஆதரவாளர்களுடன் இரண்டாவது இடத்தில்
உள்ளார்,

லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பிறகு பிரதமர் போட்டிக்காக அவர் கரீபியன்
விடுமுறையிலிருந்து தாயகம் திரும்புகிறார். இதுவரை 21 ஆதரவாளர்கள் தமக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பென்னி மோர்டான்ட்
அறிவித்துள்ளார்.

பிரசார தரப்புக்களின் தகவல்

100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கிய ரிஷி சுனக் | Rishi Sunak Got Close To 100 Mps Support

ரிஷி சுனக்கின் பிரசார தரப்புக்களின் தகவல்படி, தேவையான 100 பரிந்துரைகளை அவர்
ஏற்கனவே அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட், பாதுகாப்பு அமைச்சர் டொம் துகென்தாட்
மற்றும் முன்னாள் சுகாதார செயலாளர் மெட் ஹான்காக் உட்பட பல மூத்த சகாக்களின்
ஆதரவை சுனக் பெற்றுள்ளார்.

சர்வதேச வர்த்தகச் செயலர் கெமி படேனோச் மற்றும் முன்னாள் உள்துறைச் செயலர்
சுயெல்லா பிரேவர்மேன் ஆகியோர் ஜோன்சனை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்பதாகக்
கூறப்படுகிறது.

100 ஆதரவாளர்கள்

100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நெருங்கிய ரிஷி சுனக் | Rishi Sunak Got Close To 100 Mps Support

100 ஆதரவாளர்களைக் கண்டறிய போட்டியாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை
அவகாசம் உள்ளது.

மூன்று பேர் போட்டிக்கு தயாரானால் அதில் ஒருவரை, கொன்சர்வேடிவ் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றுவார்கள்.

இதன் பின்னர் இறுதி இரண்டு பேருக்கு இடையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதனடிப்படையில் அடுத்த வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி இங்கிலாந்தின் புதிய பிரதமர்
அறிவிக்கப்படுவார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.