36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட்!

36 செயற்கைக் கோள்களுடன் ஜிஎஸ்எல்வி எம்-3 கனரக ராக்கெட் இன்று நள்ளிரவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
உலகின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனின் ஒன் வெப் நிறுவனம், வணிக பயன்பாட்டுக்காக 5 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது. ஒன் வெப் நிறுவனம் மற்றும் இஸ்ரோவின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம்  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.
ISRO OneWeb Mission: Countdown Begins Tonight For ISRO's 36-Satellite  Launch On Heaviest Rocket LVM3
43.5 மீட்டர் உயரமும், 644 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட், இஸ்ரோவின் கனரக ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 640 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுண் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. இன்று இரவு 12.07 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது.
வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.