வெறும் டெக்னாலஜி மற்றும் வசதிகள் மட்டுமே கொண்டிருக்காமல் மனிதர்கள் உயிர் காக்கும் வசதிகளும் கொண்ட ஒரு ஸ்மார்ட் வாட்ச் பிராண்டாக ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஜவாட்ச் ஒன்று சமீபத்தில் ஒரு சிறுமியின் உடலில் புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. அந்த சிறுமிக்கு எப்போது இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்ததாகவும் அதனை ஆப்பிள் நிறுவனம் வாட்ச் காட்டியுள்ளது.
பின்னர் பரிசோதனை செய்து பார்த்தால் அந்த சிறுமிக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் Watch SE, Watch 7 மற்றும் புதிதாக வெளியான Watch 8 மற்றும் watch அல்ட்ரா ஆகிய வாட்ச்களை விற்பனை செய்துவருகிறது.
இமானி மைல்ஸ் எனும் அந்த 12 வயது சிறுமி ஆப்பிள் வாட்ச் ஒன்றை பயன்படுத்திவந்துள்ளார். அவருக்கு ஆப்பிள் நிறுவனம் அடிக்கடி இதயத்துடிப்பு அதிகரிப்பதாக அலெர்ட் செய்துகொண்டே இருந்துள்ளது. இது சற்று வினோதமாக இருந்துள்ளது.
Whatsapp செயலியில் புதிய Call Link வசதி அறிமுகம்! இனி அதிகம் நபர்களுடன் பேசலாம்!
அதன் பிறகு அந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு புற்று னாய் இருப்பது தெரியவந்துள்ளது.
பிறகு உடனடியாக அந்த புற்று நோய் கட்டியை அகற்றவேண்டும் என்று கூறி அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்று நோய் கட்டி அகற்றப்பட்டது. இன்னும் சிறிது காலம் தாமதம் செய்திருந்தால் அந்த சிறுமியின் உயிருக்கே ஆபத்தாக அது அமைந்திருக்கும் என்று அந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
Apple நிறுவனத்தின் iMessage ஆப்பை கலாய்த்த Facebook தலைவர்!
இந்த ஆப்பிள் வாட்ச் ECG, இதய துடிப்பு, விபத்து அறிதல் தொழில்நுட்பம் போன்றவற்றை கொண்டுள்ளது. ஏற்கனவே ஒரு 57 வயது பெண்மணிக்கு குறைந்த அளவு இதயத்துடிப்பு இருப்பதாக அலெர்ட் செய்து அவரை காப்பாற்றியுள்ளது.
இதுபோன்ற பல மருத்துவ சாதனைகளை ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஜவாட்ச் செய்வதால் இந்த செக்மென்ட்டில் சிறந்த வாட்சாக அது இருந்துவருகிறது. இதனை பயன்படுத்த உங்களுக்கு ஐபோன் வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
Garmin Venu Sq 2 Series ஸ்மார்ட் வாட்ச் வெளியானது! Apple நிறுவனத்திற்கு கடும் சவால்!
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்
ஆப்பிள் வாட்ச் விவரங்கள்முழு அம்சங்கள்