JioTrue5G: ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் இன்று JioTrue5G நெட்வொர்க்கில் இயங்கும் Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் வணிக மையங்கள் போன்ற இடங்களில் இந்தச் சேவை வழங்கப்படும். ராஜஸ்தானில் உள்ள புனித நகரமான நாத்துவாராவில் இருந்து JioTrue5G மூலம் இயங்கும் Wi-Fi இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜியோ வெல்கம் ஆஃபர் காலத்தில் ஜியோ பயனர்கள் இந்த புதிய வைஃபை சேவையை இலவசமாகப் பெறுவார்கள். பிற நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்களும் ஜியோ 5ஜி இயங்கும் வைஃபையை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த முடியும். ஆனால் அவர்கள் Jio 5G இயங்கும் Wi-Fi இன் முழு சேவையையும் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் ஜியோவின் வாடிக்கையாளர் ஆக வேண்டும்.
Jio True 5G Wi-Fi உடன் இணைய, வாடிக்கையாளர் 5G கைபேசியை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதும், 4G கைபேசியிலிருந்தும் இந்த சேவையை இணைக்க முடியும் என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.
JioTrue5G இயங்கும் சேவையுடன், ஜியோவின் True 5G சேவையும் நத்வாரா மற்றும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியிலும் 5ஜி சேவை தொடங்கப்பட்டது.
மற்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை விரைவில் தொடங்கவும், ட்ரூ 5ஜி கைபேசிகளின் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும் ஜியோ நிறுவனத்தின் குழுக்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றன.
இன்று, நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட ஆகாஷ் அம்பானி, “பகவான் ஸ்ரீநாத் ஜியின் அருளால், இன்று 5ஜி இயங்கும் வைஃபை சேவை நாத்வாராவில் ஜியோ ட்ரூ 5ஜி சேவையுடன் தொடங்கப்படுகிறது. 5G அனைவருக்கும் பொருந்தும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே ஜியோவின் True 5G சேவை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. ஸ்ரீநாத் ஜியின் ஆசியுடன், நாததுவாரா மற்றும் சென்னையும் இன்று முதல் ஜியோ ட்ரூ 5ஜி நகரங்களாக மாறியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில், நாத்துவாராவில் தான் 5G சேவை முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த சேவை, இதுவரை வணிகரீதியாக அறிமுகம் செய்யப்படவில்லை.
அதே நேரத்தில், தென்னிந்தியாவின் சென்னை நகரமும் நிறுவனத்தின் 5G சேவை வரைபடத்தில் வந்துள்ளது.