KD the devil டைட்டில் டீசர் – பிரமாண்டமாக வெளியிடப்பட்டது

கன்னட திரையுலகில் KVN Productions, தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது. இவர்களின் 4வது திரைப்படம் பெங்களூரில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது. முதன்முறையாக, கர்நாடகா பின்னணியில் உருவாகும் ஒரு பான் இந்தியன் திரைப்படமான, “KD-The Devil” டைட்டில் இப்படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் மத்தியில் வெளியிடப்பட்டது.

பெங்களூரு ஓரியன் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் லெஜண்ட் தசஞ்சய் தத், முன்னணி சாண்டல்வுட் ஸ்டார் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா, இயக்குனர் ‘ஷோமேன்’ பிரேம், தயாரிப்பாளர் கே.வி.என், ‘தலைவர் – பிசினஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்’ சுப்ரித், கன்னட திரைப்பட நடிகை ரக்ஷிதா, இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா ஆகியோர் கலந்துகொண்ட இவ்விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டைட்டில்  டீசர் வெளியிடப்பட்டது.

“KD-The Devil” டைட்டில் டீசரின் மிகப்பெரும் சிறப்பு என்னவென்றால், கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் இதற்கு குரல் கொடுத்துள்ளனர். தமிழ் பதிப்புகளுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். இந்தி மற்றும் மலையாளப் பதிப்புகளுக்கு முறையே சஞ்சய் தத், மோகன்லால் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். கன்னட பதிப்பிற்கு இயக்குனர் பிரேம் தானே குரல் கொடுத்துள்ளார். கன்னடத் திரைப்படத் துறையின் முதல் பான் இந்தியா திரைப்படம் என்பதை குறிக்கும் வகையில், டீசரின் பிரமாண்டம்  அமைந்திருக்கிறது. , 

விழாவில் நடிகர் சஞ்சய் தத் பேசுகையில்,”நான் இப்படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  குழுவிற்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் KVN Productionsக்கு வாழ்த்துக்கள். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் அதிகமாக வேலை செய்யப்போகிறேன் என்று நினைக்கிறேன், எனவே இந்த வாய்ப்பிற்காக மீண்டும் நன்றி” என்றார். அவரைத் தொடர்ந்து ரக்ஷிதா பேசுகையில், “சஞ்சய் தத்  இல்லாமல் இந்த நிகழ்வு முழுமையடைந்திருக்காது அவருக்கு நன்றி. அனில் ததானியின் ஆதரவு மகத்தானது அவருக்கு பெரிய நன்றி. இந்த படம் துருவா சர்ஜாவுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்” என்றார்.

Devil

KVN Productions பிசினஸ் மற்றும் ஆபரேஷன்ஸ் தலைவர் சுப்ரித் பேசுகையில், “படத்தில் அழுத்தமான கதை உள்ளது. பிரேம் சார் இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறார். பிரேம் சாருக்கு அவர் செய்யும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு பெரிய கிரேஸை உருவாக்கும் திறமை உண்டு. இந்தப்படத்திற்கு துருவா சர்ஜாவைவிட வேறு ஒரு நடிகர்  பொருத்தமாக இருக்க முடியாது என்றார். இப்படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெலியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.