Sardar: படத்தின் நாயகி ராஷி கண்ணா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!|Visual Story

ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தொடர்ச்சியாக நடித்து வருபவர்.

பாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளியான ‘Madras Cafe’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

டோலிவுட்டில் ‘OOHALU GUSAGUSALADE’, ‘VENKY MAMA’, ‘THOLI PREMA’, ‘PRATHIROJU PANDAGE’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர்.

தற்போது கோலிவுட்டிலும் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, `இமைக்கா நொடிகள்’, `அயோக்கியா’, `சங்கத் தமிழன்’,`திருச்சிற்றம்பலம்’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்து கோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்.

நிறைய தமிழ் படங்கள் அவருக்கு நல்ல வரவேற்ப்பைக் கொடுத்துள்ளதால் தமிழ் படங்களில் நடிப்பதற்காக லாக்டவுனிலிருந்து ஸ்பெஷலாக ஆன்லைன் கிளாஸ் மூலம் தமிழ் பயின்று வருகிறார்.

இது பற்றிக் கூறிய அவர், “ஒரு மொழியை கத்துக்கிறது ரொம்ப ரொம்ப சவாலான விஷயம். ஆனா, அதே அளவுக்கு அதுல சுவாரஸ்யம் இருக்கு. நாம நடிக்கிற கேரக்டருக்கு நியாயம் சேர்க்க மொழி ரொம்ப அவசியம். அது புரிஞ்சா மட்டும்தான் உணர்வு ரீதியா அந்த கேரக்டரா மாறமுடியும்” என்றார்.

மேலும், “அப்படித்தான் நான் தெலுங்கும் கத்துக்கிட்டேன். தமிழ் கத்துக்கிட்டிருக்கேன். தமிழ் தெரியாமல் நான் நடிச்சதுக்கும் இப்போ நடிக்கிறதுக்கும் எனக்கே வித்தியாசம் தெரியுது” என்று கூறினார்.

நடிப்பு மட்டுமல்ல இசையின்மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் ராஷி கண்ணா.

எனவே அதையும் லாக்டௌன் காலத்தில் ஆன்லைன் கிளாஸ் மூலமா கற்றுக்கொண்டார். கிட்டார் தான் அவற்குப் பிடித்த இசை கருவி.

தற்போது, பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இந்தி, தெலுங்கு என பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் ராஷி கண்ணா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.