Whatsapp செயலியில் புதிய Call Link வசதி அறிமுகம்! இனி அதிகம் நபர்களுடன் பேசலாம்!

செயலிகளில் Whatsapp செயலையும் ஒன்று. இதில் தற்போது புதிதாக Group Call Link வசதி அறிமுகம் செய்யப்பட்டுவருகிறது. இதன் மூலம் இனி பலர் ஒரே நேரத்தில் குரூப் காலில் இணையலாம்.

இந்த வசதியை விரைவில் அனைவர்க்கும் கிடைக்கும் வகையில் Whatsapp நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த வசதி உங்கள் போனில் உள்ளதா என்பதை அறிய நேரடியாக Whatsapp சென்று அதில் Calls டேபை திறக்கவும். அதன் மேலே Create Call Link என்று ருந்தால் உங்கள் போனில் அந்த வசதி உள்ளது என்று அர்த்தம்.

நீங்கள் இந்த வஷியின் மூலம் வீடியோ அல்லது ஆடியோ கால் லிங்க் ஒன்றை உருவாக்கி பலருக்கு பகிர்ந்து அவர்களுடன் பேசமுடியும். இதனை Whatsapp, Copy Link, Share Link போன்ற வகைகளில் அடுத்தவருக்கு பகிரமுடியும்.

Apple நிறுவனத்தின் iMessage ஆப்பை கலாய்த்த Facebook தலைவர்!

இந்த லிங்கை மற்றவர்கள் கிளிக் செய்தால் அதில் Join அல்லது Leave என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதன் மூலம் காலில் சேரவும் விடைபெறவும் முடியும். இந்த வசதி பார்பதர்க்கு Zoom மற்றும் Google Meet ஆகியவற்றில் இருப்பது போலவே உள்ளன. ஆனாலும் இந்த இரு செயலிகளில் Whatsapp செயலியை விட அதிக வசதிகள் உள்ளன.

தற்போது Whatsapp இந்த புதிய வசதியுடன் வெளியாகியுள்ளதால் விரைவில் இது மேம்பட்டு இதேபோன்ற பல புதிய வசதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5G Network மூலம் இந்தியாவில் கல்வி அடுத்த லெவல் செல்லும்! பிரதமர் நரேந்திர மோடி

தற்போது Whatsapp மூலம் 32 பேர்கள் கொண்ட குரூப் கால் பேசமுடியும். ஆனால் விரைவில் இது அதிகரிக்கப்பட்டு 1024 பேர்கள் கலந்துகொள்ளும் வகையில் மேம்படும் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்த Call Link வசதி மிகவும் பயனுள்ளதாக மாறும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.