'அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும்'- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாகவும் பட்டாசு வெடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்… ”தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2127 ஆரம்ப சுகாதார நிலையம் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளது, புதிதாக 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை 2177 ஆக உயர்வு பெறும். கடந்த 6 ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படாமல் உள்ளது. எம்எல்ஏ-க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
image
8 கிலோ மீட்டருக்கு ஒரு சுகாதார நிலையமும்,2 0 ஆயிரம் பேர் கொண்ட ஊர்களுக்கு ஒரு சுகாதார நிலையம் என்ற வழிகாட்டுதல் இருந்தது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1.26 கோடி ரூபாய் செலவாகும் என அதற்கு கட்டுமான ஊதியமாக 1.12 கோடி செலவாகும். முதலாண்டு நிதியாக ஆரம்ப சுகாதார நிலையம் பணி முடிக்க 120 கோடி செலவாகும் அதில் மாநில அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதமும் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதமும் இருக்கும்.
வரும் 30ஆம் தேதி அந்தியூர் தொகுதியில் உள்ள பர்கூர் பகுதி மலைக்கிராம மக்களுக்கான சேவையை ஆய்வு செய்ய இருக்கிறோம். 2.3 கோடி பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தொடர் சிகிச்சையின் மூலமாக மருந்து பெட்டகம் வழங்கி இருக்கிறோம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 93,60,434 பேர் முதல்முறை சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் ஒரு கோடியை தொட உள்ளது. 1 கோடியை இலக்காக வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது, 1 கோடி தொட உள்ள நிலையில் அந்த 1 கோடியாவது நபருக்கான மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
image
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 678 மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை விபத்தில் சிக்கிய 1,22,172 பேர் பயன் பெற்றுள்ளனர். அதற்காக, 108,96,37,422 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீபாவளி வெடி வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்து, தீக்காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக 5-ல் இருந்து 10 படுக்கைகள் வரை உள்ள தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயிரை பறிக்கக்கூடிய பட்டாசுகளையும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளையும் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.