அன்புமணி வகித்த பதவிக்கு ஜி.கே.மணி மகன் நியமனம்!

இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி

, அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு காலியானது. இதையடுத்து, அப்பதவிக்கு யாரை நியமனம் செய்யலாம் என்பது பற்றி பாமக நிறுவனர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் அவர் அலோசனையும் மேற்கொண்டார்.

அன்புமணி வகித்த பதவி என்பதால், அவசரம் காட்டாமல் மிகவும் பொறுமையாக அப்பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. பாமகவுக்கு புதுரத்தம் பாய்ச்சவே அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். எனவே, அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து செல்லும் ஒருவரை இளைனஞரணித் தலைவராக நியமிக்க வேண்டும் என்பது மருத்துவர் ராமதாஸின் விருப்பமாக இருந்தது.

இந்த நிலையில், பாமக இளைஞரணி தலைவராக ஜி.கே.மணியின் மகனும் லைகா திரைப்பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.கே.எம். தமிழ் குமரனுக்கு மருத்துவர் ராமதாஸ் நேரில் நியமன கடிதத்தை வழங்கினார்.

பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கௌரவ தலைவராகவும், இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராகவும் பொறுப்பேற்றிருந்த நிலையில் பாமக இளைஞரணித் தலைவராக தமிழ்க்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஜி.கே.மணிக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெள்ளி விழா எடுத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய

, மருத்துவர் அய்யாவுக்கு ஜி.கே.மணியும், நானும் என இரண்டு பிள்ளைகள் என குறிப்பிட்டார். தற்போது ஜி.கே.மணியின் மகன் இளைஞரணித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.