அருணாச்சல் ஹெலிகாப்டர் விபத்து பலி எண்ணிக்கை 5 ஆனது விசாரணைக்கு உத்தரவு

இடாநகர்: அருணாசலப் பிரதேசம், சியாங் மாவட்டத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணியின்போது  மலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உட்பட 5 பேர் பயணம் செய்தனர். விபத்து நிகழ்ந்தது மலைப்பகுதி என்பதால் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நேர தேடுதலில் நேற்று முன்தினம் மாலை வரை 4 பேரின் சடலங்கள்  மீட்கப்பட்டது. மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை மேலும் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.