லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் 114 எம்.பி.க்கள் ஆதரவுடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் முதலிடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் கடந்த 20-ம் தேதி அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமர் ஒரு வாரத்தில் தேர்வுசெய்யப்படுவார் என்று ஆளும்கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் அமைச்சர்கள் பென்னி மார்டென்ட், சுயெல்லா பிராவர்மேன் உள்ளிட்டோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். அன்றைய தினம் போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட உள்ளனர்.
இப்போதைய சூழலில் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், பென்னி மார்டென்ட் ஆகியோர் முன்வரிசையில் உள்ளனர். இவர்களில் 114 எம்.பி.க்களின் ஆதரவுடன் ரிஷி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவு அளிக்கும் எம்.பி.க்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
போரிஸ் ஜான்சனுக்கு 55 எம்.பி.க்களும், பென்னிக்கு 23 எம்.பி.க்களும் ஆதரவு அளித் துள்ளனர். கடந்த முறை நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 20 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை 100 எம்.பி.க்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரே தேர்தலில் போட்டியிட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் கடந்த முறை வாக்குச்சீட்டு, ஆன்லைன் முறையில் வாக்களித்தனர். இந்த முறை ஆன்லைனில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறஉள்ளது. நாளை மதியம் 2 மணிக்குவேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அன்று மாலை 3.30 மணிக்கு எம்.பி.க்கள்வாக்களிப்பார்கள். மாலை 6 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்.
28-ம் தேதி முடிவு
முதல் சுற்று முடிவில் 2-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருந் தால் அன்று மாலை 6.30 மணிக்கு 2-ம் சுற்று வாக்குப்பதிவில் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள். இதன் முடிவுஇரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும். அக்டோபர் 25-ம் தேதி முதல்கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் ஆன்லைனில் வாக்களிப்பார்கள். அவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 28-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். அன்றைய தினம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது தெரிய வரும்.