இங்கிலாந்து பிரதமர் ரேஸ்: புதிய யுக்தியை கையாளும் பென்னி மோர்டான்ட்!

இங்கிலாந்து பிரதமர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகிறார்கள். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பினால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். ஆனால், பதவியேற்ற 6 வாரங்களிலேயே லிஸ் ட்ரஸும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்

அவருக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் கடந்த 20ஆம் தேதி அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமர் ஒரு வாரத்தில் தேர்வுசெய்யப்படுவார் என்று ஆளும்கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

பிரதமர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். நாளையே போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட உள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் கடந்த முறை வாக்குச்சீட்டு, ஆன்லைன் முறையில் வாக்களித்தனர். இந்த முறை ஆன்லைனில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை வேட்புமனுத்தாக்கல் முடிந்ததும், எம்.பி.க்கள் வாக்களிப்பர். இரண்டு சுற்றுகள் நடைபெற்றாலும்கூட, அதன் முடிவுகள் நாளையே வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் வருகிற 25ஆம் தேதி முதல் ஆன்லைனில் வாக்களிக்கவுள்ளனர். அவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 28ஆம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது தெரிய வரும்.

இது என்ன தெரியுமா? உங்க வீட்லதான் இருக்கு!

கடந்த முறை நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 20 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை 100 எம்.பி.க்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரே தேர்தலில் போட்டியிட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கிற்கு 114 எம்.பி.க்களின் ஆதரவும், போரிஸ் ஜான்சனுக்கு 55 எம்.பி.க்களின் ஆதரவும், பென்னி மோர்டான்டிற்கு 23 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த முறையே ரிஷி சுனக் வெற்றி பெற்று பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை இரண்டாவது இடத்துக்கு தள்ளி லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். மூன்றாவது இடத்தை முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவருமான பென்னி மோர்டான்ட் பிடித்தார். இந்த முறை, பிரதமர் பதவிக்கான ரேஸில் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், பென்னி மோர்டான்ட் ஆகிய மூவர் முன்னணியில் உள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு வரவுள்ள நிலையில், கட்சியை தன்னால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறி, ரிஷி சுனக்கை போரிஸ் ஜான்சன் பின்வாங்க சொல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, #PM4PM என்ற ஹேஸ்டேக்குடன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தன்னால்தான் மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும், ரிஷ் சுனக், போரிஸ் ஜான்சன் ஆகியோர் பணக்காரர்கள்; தான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு பென்னி மோர்டான்ட் புதிய யுக்தியை கையாண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கட்சியை ஒற்றுமையாக வலிநடத்தவும், தேசிய நலனுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கவும் தனது சகாக்கள் தனக்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவரான தொழிலாளர் கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர், கன்சர்வேடிவ் கட்சியில் இருக்கும் பிளவை சுட்டிக்காட்டி பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலாளர் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், கன்சர்வேடிவ் கட்சியில் பிளவுபட்டு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “குழப்பத்தின் இந்த சுழலும் கதவை விட பிரிட்டிஷ் மக்கள் மிகவும் தகுதியானவர்கள். எங்களுக்கு இப்போது ஒரு பொதுத் தேர்தல் தேவை,” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.