கொல்கத்தா: ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் வைக்க வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தாவில் சமீபத்தில் அகில பாரத இந்து மகாசபை சார்பில் நடந்த துர்கா பூஜையில் துர்கா தேவி சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அரக்கர்களின் சிலைகளுக்கு மத்தியில் காந்தியின் சிலையும் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்ததையடுத்து, காந்தி சிலையை எடுக்காமல் தோற்றத்தை மட்டும் மாற்றினர். இது தொடர்பாக அகில பாரத இந்து மகாசபை மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்நிலையில் ரூபாய் தாள்களில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக நேதாஜி படத்தை வைக்க வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
