உக்ரைனிய விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்


100,000 டன் விமான எரிபொருள் கொண்ட உக்ரைனிய டிப்போ  அழிப்பு.

கெர்சன் நகரில் இருந்து பொதுமக்களை வேகமாக வெளியேறுமாறு ரஷ்யா அறிவிப்பு.

100,000 டன் விமான எரிபொருள் கொண்ட உக்ரைனிய டிப்போ அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்து வைத்த இருந்த கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை ரஷ்யாவின் அங்கமாக ஜனாதிபதி புடின் அறிவித்தார்.

இதையடுத்து உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், கெர்சன் நகரில் இருந்து பொதுமக்களை வேகமாக வெளியேறுமாறு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் எச்சரித்தனர்.

உக்ரைனிய விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் | Ukraine Aviation Depot Fuel Destroyed Says Russia

இந்நிலையில் உக்ரைனின் செர்காசி பிராந்தியத்தில் உள்ள ஸ்மிலா கிராமத்திற்கு அருகே உள்ள எரிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு; விதிகளை உடைத்து மூன்றாவது முறையும் வென்ற ஜி ஜின்பிங்: ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து!

மேலும் அங்கு உக்ரேனிய விமானப் படைகளுக்கான 100,000 டன்களுக்கும் அதிகமான விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.