லக்னோ: உத்தர பிரதேசத்தில் பதேப்பூர் பகுதி அருகே ராம்வான் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் ஒன்று இன்று(அக்., 23) காலை வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், திடீரென 7 பெட்டிகள் தடம் புரண்டு சரக்கு ரயில் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, அருகேயிருந்த தண்டவாளத்திலும் விழுந்துள்ளன. இதனால், அந்த வழியே செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement