காற்றின் தரத்தை அறிந்துகொள்ள உதவும் கூகுள் மேப்ஸ்: பயன்படுத்துவது எப்படி?

சென்னை: காற்றின் தரத்தை அறிந்துகொள்ளும் வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் உலகின் எந்த பகுதியில் உள்ள இடமானாலும் கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலமானது. இந்த அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் காற்றின் தரத்தையும் அறிந்து கொள்ளலாம்.

பயன்படுத்துவது எப்படி?

  • மொபைல் போனில் கூகுள் மேப்ஸ் செயலியை ஓப்பன் செய்ய வேண்டும்.
  • பின்னர் லேயர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஸ்ட்ரீட் வியூ, 3டி, டிராஃபிக் வரிசையில் காற்றின் தரம் (ஏர் குவாலிட்டி) இருக்கும்.
  • அதன் மூலம் பயனர்கள் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

இதற்காக காற்றின் தரத்தை கணக்கிடும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற இந்திய அமைப்புகளுடன் இதற்காக இணைந்துள்ளது கூகுள். நலம், திருப்திகரம், மிதம், மோசம், மிகவும் மோசம் என்ற வகையில் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. காற்றின் தரத்திற்கு ஏற்ப இதன் நிறம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இப்போதைக்கு இதன் மூலம் காற்றின் தரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. காற்றின் தரம் மோசமானால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன் சார்ந்த சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.