வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: கோவிட் பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தீபாவளி கொண்டாடினார்.
முதல்வர் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 315 குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களின் கலாசார நிகழ்ச்சியும் நடந்தது. குழந்தைகளுடன் இணைந்து சிவராஜ் சிங் சவுகானும் பாடல்களை பாடியும் நடனமாடினார். சிவராஜ் சிங் சவுகானின் மனைவியும் சாதன் சிங் சவுகானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

குழந்தைகளுடன் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்ததாக கூறிய சவுகான், இந்த நிகழ்ச்சி எப்படி இருந்தது என குழந்தைகளிடம் கேட்டறிந்தார். அப்போது, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய குழந்தைகள், இதனை ஏற்பாடு செய்ததற்காக சவுகானுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். நிகழ்ச்சி துவங்கும் முன்னர், மரக்கன்று நடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும், குழந்தைகளுக்கு பரிசு வழங்க வேண்டும் என கலெக்டர்களுக்கு சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement