திருக்கழுக்குன்றத்தில் சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்ட ஃபாஸ்ட் ஃபுட் உரிமையாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் நடத்தி வருபவர் கிளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். நேற்று இரவு குடிபோதையில் சாப்பிட வந்த இளைஞர் ஒருவர் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டதற்கு பணம்தர மறுத்து ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அருகில் இருந்தவர்கள் மடக்கி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சென்று ஹெல்மெட் அணிந்துகொண்டு வந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷை தலை, முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டியதால் அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ. 70 லட்சம் மோசடி – பாஜக நிர்வாகி கைது
பின்னர் விசாரித்ததில் அவர் சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த சரத்குமார்(வயது 28) என்பது தெரியவந்தது. இவர்மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இவரை கைதுசெய்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர் ரமேஷ் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
