தங்கலான் – விக்ரம், பா.இரஞ்சித் மாஸ் கூட்டணியின் மிரட்டல் க்ளிம்ப்ஸ்

சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் கோப்ரா படுதோல்வியடைந்தது. பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனையடுத்து அவர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் படம் உருவாக இருக்கிறது. இதற்கான லொக்கேஷன் தேடும் பணியில் பா.இரஞ்சித் தனது உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டிருந்தார். அந்தப் பணி முடிந்தவுடன் கடந்த மாதம் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது.

அந்தப் பூஜையில் விக்ரம், பா.இரஞ்சித், ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இரஞ்சித்துடன் இணைந்து எழுத்தாளர் தமிழ்ப்பிரபா திரைக்கதை எழுதுகிறார். முதல்முறையாக இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில் படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனையடுத்து படத்தின் க்ளிம்ப்ஸும், டைட்டிலும் இன்று வெளியாகுமென்று பா.இரஞ்சித் நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி படத்தின் க்ளிம்ப்ஸும், டைட்டிலும் இன்று வெளியாகியிருக்கிறது. படத்துக்கு தங்கலான் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. க்ளிம்ப்ஸை பார்க்கும்போது படம் பீரியட் ஃபிலிமாக உருவாகியிருப்பதும், கோலார் தங்க வயலின் ஆரம்பகாலக்கட்டத்தின் அடிப்படையி படம் உருவாகியிருப்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் படத்தில் பசுபதி, பார்வதி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமானது பான் இந்தியா படமாக உருவாகவிருக்கிறது. 

கோலார் தங்க வயல் குறித்து கேஜிஎஃப் வெளியாகியிருந்தாலும் அது முழுக்க முழுக்க கமர்ஷியல் அடிப்படையில் உருவாகியிருந்தது. ஆனால் தற்போது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கோலார் தங்க வயலை பா. இரஞ்சித் தொட்டிருப்பதால் நிச்சயம் இதன் மூலம் பல விஷயங்கள் வெளியில் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.