பும்ரா – சஞ்சனா கணேசன் அழகான காதல் கதை.
திருமணத்தில் சஞ்சனா போட்டிருந்த மெஹந்தி பெரியளவில் வைரல்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா.
இவருக்கும் தமிழ்ப்பெண்ணான சஞ்சனா கணேசனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.
இவர்களின் திருமணம் காதல் திருமணம் தான்..! பும்ரா கிரிக்கெட் வீரர் என்ற நிலையில் சஞ்சனா விளையாட்டு வர்ணனையாளர் ஆவார்.
இதன்மூலம் இவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை.
ஏனெனில் பும்ராவை பார்த்த போது சஞ்சனாவுக்கு திமிர் பிடித்தவர் என தோன்றிய நிலையில் அதே போல தான் பும்ராவுக்கும் சஞ்சனாவை பார்க்கும் போதும் தோன்றியிருக்கிறது.
Jasprit Bumrah twitter
இந்த நிலையில் கடந்த 2019 ஐசிசி உலகக்கோப்பையின் போது பிரித்தானியாவில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேச தொடங்கினர். அப்போது தான் இருவருமே நல்ல அன்பாக பழகக்கூடிய குணாதிசயம் கொண்டவர்கள் என உணர்ந்தனர். இந்த பேச்சு நட்பாகி காதலாக மாறியது.
இதையடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் பும்ரா – சஞ்சனா திருமணம் நடைபெற்றது.
மெஹந்தி நிகழ்ச்சியின் போது சஞ்சனா தனது கையில் போட்டிருந்த மெஹந்தி மிகப்பெரிய அளவில் வைரலானது.
ஏனெனில் அந்த மெஹந்தியில் சஞ்சனா 2019 உலகக் கோப்பை லோகோவை கையில் போட்டிருந்தார்.
அதாவது இவர்கள் காதலும் அப்போது தான் மலர்ந்திருக்கும் என்பதை குறிக்கவே சஞ்சனா அவ்வாறு போட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
zeenews