@Image1@
திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
ஆந்திர மாநிலம் திருமலையில், புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதை ஒட்டி, நேற்று பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
மேலும் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து சூரிய கிரகணம் வருவதால், நாளை மறுநாள் ஏழுமலையான் கோவில் தொடர்ந்து 11 மணிநேரம் மூடப்பட உள்ளது.
இதையடுத்து, நேற்று காலை 28 காத்திருப்பு அறைகளில் மட்டுமே பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
இதனால் தர்மதரிசனத்திற்கு 10 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு மூன்று மணிநேரமும் தேவைப்பட்டது. நேற்று முன்தினம் 62 ஆயிரத்து 203 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 29 ஆயிரத்து 100 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.
தரிசன அனுமதியுள்ள பக்தர்கள், 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
திருமலை மலைப்பாதை காலை 3:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12:00 மணிக்கு மூடப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement