தீபாவளி சிறப்பு விடுமுறை… வந்தாச்சு ஸ்பெஷல் அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் கிடைத்ததால் விடுமுறை மொத்தம் மூன்று நாட்களாக மாறியது. இதனால் வெளியூர் செல்வோருக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக சொந்த ஊர்களுக்கும், உறவினர்களின் வீடுகளுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதற்காக தனியார் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை பயன்படுத்தினர்.

இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் திங்கள் அன்று இரவு திரும்பிவிட விரும்புவர். அப்படி செய்தால் முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்து விடும். நெரிசல் அதிகமாகி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். குறிப்பாக சென்னை திரும்பும் மக்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலை சந்திப்பர்.

நகருக்குள் வருவதற்குள் பல நேரம் ஆகிவிடும். இதற்கிடையில் கூட்ட நெரிசலால் பேருந்துகள், ரயில்கள் கிடைக்காமல் தவிப்பவர். தமிழக அரசு சார்பிலும், தெற்கு ரயில்வே சார்பிலும் எவ்வளவு தான் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும் போதுமானதாக இருப்பதில்லை. பலரும் தொங்கிக் கொண்டு செல்வதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

எனவே தீபாவளிக்கு அடுத்த அக்டோபர் 25 செவ்வாய் கிழமை ஒருநாள் விடுமுறை விட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பலரது கருத்து. இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை வெளியாகவில்லை. இதன் காரணமாக திங்கள் அன்று இரவே திரும்புவதற்கு பொதுமக்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் சற்றே ஆறுதல் அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது தனியார் பள்ளிகள் பலவும் வரும் செவ்வாய் அன்று விடுமுறை அறிவித்துள்ளன. இது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. இதனால் ஒருநாள் தாமதமாக புறப்பட்டு செல்லலாம். தீபாவளி இரவை நிம்மதியாக கழிப்பது மட்டுமின்றி மறுநாள் நன்றாக ஓய்வெடுத்து கொள்ள முடியும்.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? இல்லையெனில் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர் தீபாவளி விடுமுறையை சரியாக திட்டமிட வேண்டியுள்ளது. நாளைய தினம் (அக்டோபர் 24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதுவரை கூடுதல் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகாதது பெரும் ஏமாற்றமாக மாறியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.