வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, சவுதி பட்டத்து இளவரசரும், சவுதி பிரதமருமான முகமது பில் சல்மான் அடுத்த மாதம் டில்லி வர உள்ளதாக தெரிகிறது.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடக்கும் ஜீ20 மாநாட்டில் பங்கேற்க செல்லும் வழியில் முகமது பின் சல்மான், நவ.,14ம் தேதி காலை டில்லி வந்து அன்றைய தினம் மாலையே கிளம்புகிறார்.
பிரதமர் அழைப்பை ஏற்று முகமது பின் சல்மான் இந்தியா வர உள்ளதாக தெரிகிறது. இதற்கான அழைப்பு கடந்த செப்., மாதம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. டில்லி வரும் முகமது பின் சல்மான், மோடியை சந்தித்து பேச உள்ளார்.

அதற்கு முன்னதாக, சவுதியின் எரிசக்தித்துறை அமைச்சர் அபுலாஜிஜ் பின் சல்மான் இந்த வாரம் இந்தியா வருகிறார். அப்போது, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் புரி மற்றும் ஆர்கே சிங்கை சந்தித்து அவர் பேச உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement