ப.சிதம்பரத்தை புறக்கணித்த காங்கிரஸ்காரர்கள்… சொந்த ஊரிலேயே நேர்ந்த அவமானம்!

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதையடுத்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் விழா நடத்தினர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும், எம்பியுமான கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி ஆகியோரை புறக்கணித்து காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

காரைக்குடி தொகுதியை கடந்த சட்டபேரவை தேர்தலில் தனது ஆதரவாளருக்கு பெற்றுத்தர அத்தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி முயற்சித்தார் ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான மாங்குடிக்கு சீட்டு கிடைத்து வெற்றி பெற்றார்.தேர்தலின்போது கே.ஆர்.ராமசாமி, ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டனர்.

அப்போது தேவகோட்டையில் கார்த்தி சிதம்பரம் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டது எனினும் அதன் பின்பு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ப.சிதம்பரம் அல்லது கார்த்தி சிதம்பரம் பங்கேற்று வந்தனர். இல்லாவிட்டாலும் அவர்களது புகைப்படங்களாவது பேனர்களில் இடம் பெறும்.

இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றது தொடர்பான விழாவை காரைக்குடி பெரியார் சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். இந்த விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றன

ஆனால் ப.சிதம்பரம், .கார்த்திக் சிதம்பரம் , காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெறவில்லை.அண்மையில் நடந்த காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுனா கார்கே எதிர்த்து போட்டியிட்ட சசிதருரை கார்த்தி சிதம்பரம் ஆதரித்தார் ஆனால் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார் இதை அடுத்து மாவட்டத்தில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை விரும்பாத கட்சியினர் ஒன்று சேர்ந்து அதை வெளிப்படையாக காரைக்குடியில் நடைபெற்ற விழாவில் இருவரையும் புறக்கணித்துள்ளதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.