அகமதாபாத்: குஜராத்தில் இந்தாண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இம்மாநிலத்தைப் பொருத்தவரை பாஜ, காங்கிரஸ் கட்சிகளிடையே மட்டுமே கடும் போட்டி இருந்து வந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மியும் களமிறங்கி உள்ளது. இந்நிலையில், வதோதரா மாவட்டத்தில் உள்ள தாபோய் தொகுதியில் கடந்த 2012-2017 வரை பாஜ எம்எல்ஏ.வாக இருந்த பால்கிருஷ்ணா படேல், அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தாகூர், முன்னாள் தலைவர் சித்தார்த் படேல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தனக்கும் தனது மகனுக்கும் கட்சியில் சீட் ஒதுக்கப்படவில்லை. மேலும், தனது கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாஜ அங்கீகரிக்காமல் தொடர்ந்து ஓரம் கட்டியதால் காங்கிரசில் சேர்ந்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
