இன்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில், இலங்கையின் கலாச்சார விழாவான ‘லங்கன் ஃபெஸ்ட்’ நிகழ்வு நடைபெறவுள்ளது.
‘லங்கன் ஃபெஸ்ட்’ , இலங்கையின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியததை முன்னிலைப்படுத்தும் கொண்டாட்ட நிகழ்வு. இதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசைஇ நடனம் மற்றும் கைவினை பொருட்கள் மூலம் இலங்கையின் தனித்துவமான அனுபவங்கள் பகிரப்படும்.
இந்த நிகழ்வு மெல்போர்னில் உள்ள குயின் விக்டோரியா சந்தையில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.