தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் ராமர் என்பவருக்கு சதீஷ் என்ற 21 வயது மகன் இருந்தார். இவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ கடைசி வருடம் படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கியவாறு அவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர்.
வீட்டிற்கு செல்வதாக கூறி ராசிபுரம் அருகே உள்ள பாலப்பாளையம் கிராமத்தில் உள்ள கலாநிதி என்ற நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்தவாறு இருவரும் சேர்ந்து போதை பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் அறிந்து கொண்ட விசாரணை நடத்தி இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதை அடுத்து மீண்டும் சதீஷ் கல்லூரி விடுதிக்கு சென்ற நிலையில் அவருடைய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து கல்லூரி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து சதீஷின் உடலைமிட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், இந்த மாணவனின் உடலை நண்பர்கள் சிலர் சேர்ந்து விடுதியில் இருந்து தூக்கிக்கொண்டு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து மாணவனின் மரணத்தில் ஏதாவது மர்மம் இருக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.