
விக்ரம் 61 : ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட அப்டேட்!
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். நிலக்கரி சுரங்க கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ‛விக்ரம்- 61 கில்லர் ரைட் திரைப்படம். இதன் காரணமாக இந்த படத்தில் எனக்கு சவாலான நிறைய வித்தியாசமான காட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்படத்திற்கு இசையமைக்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் .