PAK vs IND: "எங்க ப்ளேயிங் லெவன்ல 13 பேரு!" – ட்ரெண்டாகும் கேப்டன் ரோஹித் சர்மா, காரணம் என்ன?

டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி மெல்பர்னில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் டாஸின் போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசிய ஒரு விஷயம் இணையதளத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் ரோஹித்தும் டாஸூக்கு வந்திருந்தனர். டாஸ் நிகழ்வை ரவிசாஸ்திரி தொகுத்து வழங்கி வந்தார். ரோஹித்தே டாஸையும் வென்றிருந்தார். பந்துவீச்சைத் தேர்வு செய்வதாகவும் அறிவித்தார். அதன்பிறகு, ரவிசாஸ்திரி மெல்பர்ன் மைதானத்தைப் பற்றியும் ரசிகர்களைப் பற்றியும் கேள்வி கேட்க அதற்கெல்லாம் பதில் கூறி முடித்தார். இறுதியாக ரவிசாஸ்திரி இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் என்னவென்று ரோஹித்திடம் கேட்டார். அதற்குத்தான் ரோஹித் ஒரு வித்தியாசமான பதிலைக் கொடுத்தார்.

PAK vs IND

என ரோஹித் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் பற்றிக் கூறினார். இது ஒரு வேடிக்கையான பதிலாக இருந்தது. அணியில் 11 பேர்தான் ஆடவே முடியும். அப்படியிருக்கையில் ரோஹித் சொன்ன கணக்குப்படி பார்த்தால் எண்ணிக்கையில் மொத்தம் 13 வீரர்கள் வருகிறார்கள். ’13 பேர் எப்படியய்யா ப்ளேயிங் லெவனில் ஆட முடியும்?’ என ரசிகர்களும் வேடிக்கையாக ரோஹித் பேசியதைப் பகிர்ந்து வருகின்றனர்.

டாஸின் போது இதேமாதிரியான வேடிக்கையான சம்பவங்கள் பல முறை நடந்திருக்கின்றன. சில நேரங்களில் கேப்டன்கள் ப்ளேயிங் லெவனை மறந்துவிட்டு சிறுபிள்ளைகள் போல ரியாக்ட் செய்த காரியங்களும் நடந்திருக்கின்றன. சில சமயங்களில் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பே பதற்றத்தில் காயினைச் சுண்டிவிட்ட கேப்டன்களும் இருக்கிறார்கள். ரோஹித்தும் அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார்.

Rohit Sharma

போட்டிக்கு முன்பான தேசிய கீதத்தின் போது ரோஹித் உணர்ச்சிவசப்பட்டது, ஸ்பைடர் கேமை பார்த்து எரிச்சலடைந்தது என இன்றைய போட்டி சம்பந்தமான ட்ரெண்டிங்கிலெல்லாம் ரோஹித்தே இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.