அமைதி திரும்ப வாய்ப்பிருக்கிறது… உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நம்பிக்கை


உக்ரைனில் அமைதிக்கான வாய்ப்பு உள்ளது, அது உரிய நேரத்தில் வெளிப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகள் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.

உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வந்தாலும், அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரில் உலக அமைதிக்கான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மேக்ரான்,
உக்ரைனில் அமைதிக்கான வாய்ப்பு உள்ளது, அது உரிய நேரத்தில் வெளிப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அமைதி திரும்ப வாய்ப்பிருக்கிறது... உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நம்பிக்கை | Chance For Peace Emmanuel Macron Says

@AP

மேலும், உக்ரேனிய மக்களும் அங்குள்ள அரசியல்வாதிகளும் அந்த வாய்ப்பை பயன்படுத்தும் முடிவுக்கு வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் மேற்கத்திய நாடுகள் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனிடையே, ஞாயிறன்று ஏவுகணை மற்றும் ட்ரோன் விமானங்களை உக்ரைன் மீது ரஷ்யா ஏவியுள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யா குறிப்பிடும் உக்ரைன் மீதான ராணுவ சிறப்பு நடவடிக்கையானது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu உக்ரைன் விவகாரம் தொடர்பில் தனித்தனி உரையாடல்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார்.

அமைதி திரும்ப வாய்ப்பிருக்கிறது... உக்ரைன் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நம்பிக்கை | Chance For Peace Emmanuel Macron Says

Credit: Ukraine Defense Ministry



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.