இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – விபத்தில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயம்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். 

காக்கா தோப்பூரை சேர்ந்த பெருமாள் என்பவர், வேடசந்தூர் – திண்டுக்கல் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த விஜய் பிரதாப், முதியவர் மீது மோதினார்.

இதில், தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.