உலகக் கிண்ண T-20 போட்டித் தொடரில், இலங்கை அணி நாளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளுகின்றது.
2022 உலகக் கிண்ண T-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணி எதிர்கொள்ளும் இரண்டாவது போட்டி இதுவாகும்.
இதேவேளை ,இலங்கை அணி அயர்லாந்து அணியைநேற்று (23) 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியாவின் ஹொபார்ட்டில் இடம்பெற்ற இப்போட்டியில் ,நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் திக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
129 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 15 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் குசல் மென்டிஸ் 68 ஓட்டங்களையும், சரித் அசலன்க 31 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்சன டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் நாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்