கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளதை அடுத்து, உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேறுவதற்கான ஐந்து வாய்ப்புகள் குறித்து, அங்குள்ள இந்திய துாதரகம் அறிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக தாக்குதலின் வேகத்தை ரஷ்யா குறைத்திருந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உக்ரைன் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி, இங்குள்ள இந்திய துாதரகம் மூன்று நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான ஐந்து வழிகளை இந்திய துாதரகம் அறிவித்துள்ளது.
இதன்படி உக்ரைன் எல்லையில் உள்ள ஹங்கேரி, ஸ்லோவாகியா, மோல்டோவா, போலந்து, ரொமேனியா ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் வாயிலாக வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியேறும் இந்தியர்கள் பாஸ்போர்ட், மாணவர் அடையாள அட்டை, உக்ரைன் ‘பெர்மிட்’ அட்டை உள்ளிட்ட ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும் என்றும் இந்திய துாதரகம் அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement