கலை இயக்குனர் சந்தானம் மறைவு

பிரபல கலை இயக்குனர் சந்தானம், 50 மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தனது கலை இயக்கத்தால் பிரபலமானவர் சந்தானம். தொடர்ந்து தெய்வமகள், டிமான்டி காலனி, இறுதிச்சுற்று, சர்கார், தர்பார் போன்ற பல படங்களுக்கு பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவரது உயிர் பிரிந்தது. இவரின் திடீர் மரணம் திரையுலகினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோஷ் சிவன், அஜய் ஞானமுத்து, வசந்தபாலன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.