காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – இளைஞர் போலீசில் சரண்

கண்ணூர் அருகே காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த இளைஞர் போலீசில் சரணடைந்தார்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்ற இளம்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்ற இளைஞரும் நட்பாக பழகி வந்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷியாம்ஜித்துக்கு விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்பட்ட நிலையில், அவர் விஷ்ணு பிரியாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
image
ஆனால், நண்பனாக பழகி வந்த இளைஞனை காதலனாக விஷ்ணு பிரியா ஏற்றுக்கொள்ள மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷியாம்ஜித், விஷ்ணு பிரியாவின் வீட்டுக்குள் புகுந்து விஷ்ணு பிரியாவின் கழுத்தையும் கையையும் அறுத்து கொலைசெய்தாகத் தெரிகிறது. இதைக் கண்ட விஷ்ணு பிரியாவின் தாயார் அலறவே அப்பகுதியினர் விரைந்துசென்று பார்த்ததோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
image
இதையடுத்து அங்கு வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கொலை நடைபெற்று மூன்று மணி நேரத்தில் கொலைசெய்த இளைஞர் ஷியாம்ஜித் தானாகவே முன்வந்து போலீசில் சரண்டைந்தார். தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணை கொலை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.