கைது பயம்..? இடிந்து போயுள்ள ஈபிஎஸ்… அதிர்ச்சியில் சேலம் அதிமுக…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனி நபர் விசாரணை அறிக்கை, கொடநாடு வழக்கு, துணைவேந்தர் நியமனங்களில் ஊழல், டெண்டர் முறைகேடு என அடுத்தடுத்த குற்றசாட்டுகளால்

கலக்கத்தில் உள்ளார். இதில் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை அறிக்கையில் ஈபிஎஸ் பெயர் அடிபடவில்லை என்றாலும் தூத்துக்குடி சம்பவம் துரத்த தொடங்கியுள்ளது. அண்மையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் அதிமுகவினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றும் சபாநாயகர் நடுநிலையாக செயல்படவில்லை என்றும் ஈபிஎஸ் குற்றசாட்டினார்.

மேலும், சட்டசபை முடிந்த பிறகு ஸ்டாலினும், ஓபிஎஸ்.,சும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர் என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி அதிமுக.,வை சிதைக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்ற பிளானில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கலக்கத்துடன் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து நடந்த போராட்டமும் ஈபிஎஸ் கைதும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை குதூகலமாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் சேலம் அதிமுக வட்டாரம் சோகத்தில் உள்ளது.

ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போராடி உயிர் நீத்த மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த நிகழ்வு அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை யொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருது சகோதரர்களின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சேலம் வந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன் வீட்டின் வளாகத்திலே மருது சகோதரர்கள் உருவப் படத்தை அமைத்து அலங்கரித்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

தனி ஒரு ஆளாக கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்பிக்கள் முன்னாள் அமைச்சர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் தனி ஒருவராய் அந்த படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியது கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட செயலாளர்கள் என சேலத்தின் அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தனி ஆணையத்தின் அறிக்கைகள் எடப்பாடி பழனிச்சாமியை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்குகள் இவரை நெருங்குவதாலும் இது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டாரா யாரும் சந்திக்காத சூழ்நிலையில் நிகழ்வில் அவர் பங்கேற்றது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.