கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் பலியானது போலீசார் விசாரணை தெரியவந்தது. ஜமேசா முபின் ஒரு பொறியியல் பட்டதாரி என தற்போது தெரியவந்துள்ளது.
அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்தனர். ஜமேசா முபின் மனித வெடிகுண்டாக செயல்பட்ட முற்பட்டாரா என்பது குறித்து அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜமேசா மூபின் வீட்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு வெள்ளை பைகளில் மர்ம பொருள்களை ஜமேசா மூபின் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் எடுத்துச் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஜமேசா மூபின் உடன் வந்த மற்ற நான்கு நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் கார் வெடிப்பு சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
🦉கோவை : ஜமேஷா முபீன் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சி ஒன்றில் சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது pic.twitter.com/ZeCBjrfJht
— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) October 24, 2022