விருத்தாச்சலம் காவல் நிலையம் அருகே நடந்த கோஷ்டி மோதலில், பீர் பாட்டிலால் மாறி மாறி தாக்கிக்கொண்ட நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட கோஷ்டி சண்டையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி இரண்டு கோஷ்யினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.
இந்த நிலையில் ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மற்றொருவர் மண்டையை அடித்து உடைத்ததில் ஏற்பட்ட படுகாயத்துடன் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில் நான்குக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நேரத்தில் மதுபோதை காரணமாகவும், முன் விரோதம் காரணமாகவும் அடிக்கடி விருத்தாச்சலத்தில் மோதல் ஏற்பட்டு பொது இடத்தில் மண்டை உடைப்பு நடந்தது, பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்ததால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பயத்துடன் தலைதெறிக்க தப்பியோடினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
