தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் 22வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு!


22வது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு பாதகமும் இல்லாத சாதகமும்
இல்லாத நிலை காணப்பட்டதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான
உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதாக தமிழ் தேசிய
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். 

தேர்தல் நடத்தப்பட வேண்டும் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் 22வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு! | 22Nd Amendment

09மாணங்களுக்குமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும்
எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடக்கூடாது என்று எதிர்க்கட்சி கூட்டத்தில்
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அந்த விடயத்தில் தாங்களும் உறுதியாகவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார். 

காணி கொள்ளை 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் 22வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு! | 22Nd Amendment

2008ஆம் ஆண்டு தொடக்கம் ஆளும் கட்சியில் உள்ள ஒரு மக்கள் பிரதிநிதி, ஒரு
கட்சியின் தலைவர், கிழக்கு மாகாணத்தினை மீட்கப்போகின்றேன் என்று கூறிய
கட்சியின் தலைவர் காணி கொள்ளை நடைபெற்றிருந்தால் அதனை வெளிப்படையாக
வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

அதற்கு மேலாக கடந்த இரண்டு வருடமாக மாவட்ட அபிவிருத்திக்குழுவின்
தலைவராகயிக்கின்றார். அவர் மாவட்ட செயலகத்தில் தகவலைப்பெற்று மாவட்ட மக்களுக்கு
வெளிப்படுத்தியிருக்கலாம்.

அத்துடன் அது தொடர்புபட்ட அமைச்சரை தொடர்புகொண்டு
அக்காணிகளை மீட்டு வறிய மக்களுக்கு பிரித்துக்கொடுப்பதே உண்மையான மக்கள்
பிரதிநிதியின் கடமையாகும்” எனவும் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.