பூமிக்கு பன்றியின் மீது காதல் ஏற்பாடு?
தந்தை பெரியாரும் திராவிட கட்சிகளும் ஹிந்து மத புராணங்கள் ஒரு கட்டுக்கதை என பேசி வருகின்றனர். இவர்கள் ஹிந்து மதத்தினரையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் கொச்சை வார்த்தைகளால் பல்வேறு தருணங்களில் பேசி உள்ளனர். விஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்தும் ஒரு கற்பனை கதை என்று சொல்லும் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் நரகாசுரனின் வீரவணக்க நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படுகிறது.
கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினரால் நரகாசுரனின் வீர வணக்கம் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த இங்கர்சால் தலைமை தாங்கினார். மதிமுக வின் கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தித்தேவன் சிறப்புரை ஆற்றினார். மேலும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருட்ணன், அமைப்புச் செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சி கோவை மாவட்டம் காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் படிப்பாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்ட அழைப்பு இதழில் இந்து மத நம்பிக்கைகள் பற்றி பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருந்தனர். அந்த அழைப்பிதழில் புராணத்தின் கூற்றுப்படி தீபாவளி என்றால் என்ன எனவும், பார்ப்பனர்கள் சொன்னால் நம்ப வேண்டுமா எனவும் பல்வேறு கேள்விகளையும் கருத்துகளையும் முன்வைத்து இருந்தனர். அதில் குறிப்பிட்ட சில கருத்துக்கள் இந்து மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
குறிப்பாக “விரித்த உலகம் பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. ஆசைக்கு இணங்கி பன்றி பூமியுடன் கலவி செய்தது. இதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளை பெற்றது. விஷ்ணு கொன்ற நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் தீபாவளி கொண்டாட வேண்டும்” எனவும்.
மேலும் “விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவால் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனை கொன்று பூமியை விரித்தால் பூமிக்கு பன்றின் மீது காதல் ஏற்படுவானேன்? தீபாவளி என்றால் அது திராவிடர்களை வீழ்த்திய நாள் என்று தான் அர்த்தம். நரகாசுரன் இறந்த நாள் என்றால் அது திராவிட நாட்டு தீரன் செத்தான் என்பதே அர்த்தம்.” இது போன்ற பல கருத்துக்கள் அந்த அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.
மச்ச அவதாரம் எடுத்த விஷ்ணுவும் பூமா தேவியுடன் இணைந்தால் எவ்வாறு குழந்தை பிறக்கும் என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர். நரகாசுரன் இறந்த நாளான தீபாவளிக்கு அவருக்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன்? அவ்வாறு நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்றால் விஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர்தான் நரகாசுரன் என்பதை ஒத்துக் கொள்கிறார்களா? இந்து மதத்தில் உள்ள புராணங்களை கற்பனை என்று கூறும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர். அதே கற்பனை காவியத்தில் வரும் நரகாசுரனுக்கு மட்டும் வீரவணக்கம் செலுத்துவது ஏன்? இதனால் இந்து மத புராணங்களை கற்பனை இல்லை என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஒத்துக் கொள்கிறார்களா? என ஹிந்து மதத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.