நெருப்பு கோளமான ரஷ்ய விமானம்… தலை கீழாக குடியிருப்பின் மீது பாய்ந்த திகில் நிமிடங்கள்


தலை கீழாக பாய்ந்து விபத்தில் சிக்குவதும், நெருப்பு கோளமாக மாறுவதும் மக்கள் பதிவு செய்துள்ளனர்.

5.47 மணிக்கு புறப்பட்ட விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது

ரஷ்ய போர் விமானம் ஒன்று, நடுவானில் நெருப்பு கோளமாக மாறி, தலை கீழாக குடியிருப்பின் மீது பாய்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த சம்பவத்தில் விமானிகள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சோதனை ஓட்டம் முன்னெடுத்த இரு விமானிகளுக்கும் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Irkutsk நகரில் நடந்த இச்சம்பவத்தில், குறித்த விமானமானது தலை கீழாக பாய்ந்து விபத்தில் சிக்குவதும், பின்னர் நெருப்பு கோளமாக மாறுவதும் அப்பகுதி மக்கள் பதிவு செய்துள்ளனர்.

நெருப்பு கோளமான ரஷ்ய விமானம்... தலை கீழாக குடியிருப்பின் மீது பாய்ந்த திகில் நிமிடங்கள் | Fighter Plane Crashes Both Pilots Suffocate

@east2west news

இரு மாடி குடியிருப்பு ஒன்றின் மீது பாய்ந்த அந்த விமானம், வெடித்துச் சிதறிய நிலையில், அந்த கட்டிடத்தில் இருந்து 3 சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Su-30 போர் விமானமானது இருவர் மட்டுமே பயணிக்கும் நவீன விமானமாகும். உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.47 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.

நெருப்பு கோளமான ரஷ்ய விமானம்... தலை கீழாக குடியிருப்பின் மீது பாய்ந்த திகில் நிமிடங்கள் | Fighter Plane Crashes Both Pilots Suffocate

@epa

ஆனால், விமானிகள் இருவருக்கும் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட காரணம் என்ன என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
உக்ரைன் மீதான இந்த 9 மாத படையெடுப்பில் இதுவரை 11 போர் விமானங்களை ரஷ்யா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெருப்பு கோளமான ரஷ்ய விமானம்... தலை கீழாக குடியிருப்பின் மீது பாய்ந்த திகில் நிமிடங்கள் | Fighter Plane Crashes Both Pilots Suffocate

@e2w



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.