நீலகிரி மாவட்டம் உதகையில், இரவு நேரத்தில் பட்டாசு வெடி சத்தத்திற்கு பயந்து, பறவைகள், கூட்டம் கூட்டமாக அங்கு இங்குமாக பறந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகள் வெடிக்க வனத்துறை மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்றிரவு மக்கள் பட்டாசு வெடித்ததால் சிட்டுக் குருவி, புறாக்கள் போன்ற பறவைகள் பயந்து இருப்பிடம் தேடி அலைந்ததை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.