கெய்ரோ: சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்ரிக்க நாடான சூடானில், புளூ நைல் மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியினரிடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த மோதலில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என இதுவரை, 220 பேர் கொல்லப்பட்டுஉள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர். இதையடுத்து, புளூ நைல் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பித்து அந்த மாகாணத்தின் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். சமரச பேச்சுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement