அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் பளுதூக்கும் போட்டிகளில் கண்டி திரித்துவ கல்லூரி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் .கடந்த மூன்று நாட்களாக பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 20 வயது மற்றும் 17 வயதுகளுக்கு உட்பட்ட பிரிவில் திரித்துவ கல்லூரியின் போட்டியாளர்கள் ,முதல் இரண்டு இடங்களைப் பெற்று சம்பியனாகத் தெரிவானார்கள்.
வலகம்பா மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.